நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MH17: ரஷ்யாவுக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை; உயிரிழந்தோர் உறவினர்கள் வலியுறுத்து

கோலாலம்பூர்:

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH17 விமான சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அந்த விமானம் உக்ரேன் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் பலியாகினர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து விசாரணை  நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அனைத்துலகப் புலனாய்வாளர்கள் பலரும் ரஷ்ய தயாரிப்பான, தரையில் இருந்து விண்ணில் பாய்ந்து தாக்கும் ஏவுகணை மூலம்ததான் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஷ்ய ஆதரவு பெற்ற போராளிக் குழுவினர்தான் அந்த ஏவுகணையை செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

Malaysia Airlines flight 17 | Background, Crash, Investigation, & Facts |  Britannica

கடந்த 2014ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வீழ்த்தப்பட்டது MH17. இந்தச் சம்பவத்தில் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது.

எனினும் மூன்று ரஷ்ய பிரஜைகளும் யுக்ரேன் பிரஜை ஒருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு என்ன  என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனும் கோரிக்கையை விபத்தில் பலியானோரின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

"என்ன நடந்தது என்பது தெரிய வேண்டடும். ஏன் நடந்தது, எப்படி நடந்தது, யார் இதற்குப் பொறுப்பு? என்பது தெரிய வேண்டும். ஏவுகணையை செலுத்துவதற்கான பொத்தானை அழுத்திய நபர் முதல் மிக உயர் பதவியில் உள்ளவர்கள் வரை அனைவரும் இதற்குப் பொறுப்பு. அவர்கள் கிரெம்ளின் மாளிகையில் கூட இருக்கலாம்," என்று MH17 விமானம் செய்த மூன்று பேரின் உறவினரான பியட் பிளோக் என்பவர் நீதிபதிகளிடம் ஆவேசமாக வலியுறுத்தினார்.

இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தார், உறவினர்கள் சார்பாக வழக்கு விசாரணையில் முன்னிலையாகும் வழக்கறிஞர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் மீண்டும் விசாரணை தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset