நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ முருகன் டியூஷன் சென்டர் அல்ல; சமூக கடப்பாடுடன் செயல்படும் கல்வி நிலையமாகும்: கணபதிராவ்

கோலாலம்பூர்:

ஸ்ரீ முருகன் டியூஷன் சென்டர் அல்ல. மாறாக சமூக கடப்பாடுடன் செயல்படும் கல்வி நிலையமாகும்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் இதனை கூறினார்.

டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா சிந்தனையில் உருவான ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இன்று மிகப் பெரிய ஆழமரமாக நிற்கிறது.

இக்கல்வி நிலையத்திற்கு எதிராக பல புகார்கள் எழுந்தாலும், அக்கல்வி நிலையம் தனது இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகிறது.

குறிப்பாக சமுக கடப்பாடுடன் பல திட்டங்களை இக்கல்வி நிலையம் மேற்கொண்டு வருகிறது.

இந்திய மாணவர்கள் சாதிக்க கல்வி மட்டும் தான் ஆயுதம்  என்ற இலக்குடன் இக்கல்வி நிலையம் செயல்படுகிறது.

இதன் வாயிலாக பல சாதனையாளர்களை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவாக்கி உள்ளது.

இது தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் வெற்றி என்று அதன் பிரமஸ்ட்ரா திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய கணபதிராவ் இதனை கூறினார்.

தேர்வுகள் மாணவர்களை நெறிப்படுத்தும் என்பது ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கருத்தாக உள்ளது.

இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி அதன் வாயிலாக பல ஆய்வுகளையும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் செய்துள்ளது.

இந்த ஆய்வுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முழு ஆதரவை வழங்குவேன் என்று கணபதி ராவ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset