நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025இல் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்: சுரேன் கந்தா

கோலாலம்பூர்:

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அடுத்தாண்டு நாடு முழுவதும் மிகப் பெரிய கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்.

அந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.

மாணவர்களை தேர்வுகள் நெறிப்படுத்தும் என்பது ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் நிலைபாடாக உள்ளது.

அதற்காக பள்ளிகளில் தேர்வுகளை கொண்டு வர வேண்டும் நாங்கள் கூறவில்லை.

இதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தேர்வுகளை நடத்தியது. கிடத்தட்ட 5,000 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.

இத்தேர்வுகளின் வாயிலாக மாணவர்களின் நிலை குறித்து முழுமையாக ஆய்வுகளை செய்தது.

இந்த ஆய்வின் முடிவுகள் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தேர்வு இருக்கிறதோ இல்லையோ. இந்திய மாணவர்கள் கல்வியில் மிகப் பெரிய சாதனைகளை படைக்க வேண்டும்.

கல்வியை தவிர்த்து எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் மாணவர்கள் தயாராக வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் பிரமஸ்ட்ரா எனும் திட்டத்தை ஸ்ரீ முருகன் நிலையம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இதன் வாயிலாக பல திட்டங்களை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீ முருகன் நிலையம் மையங்கள் ஆங்காங்கே திறக்கப்படவுள்ளது. இளையோர், மகளிருக்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுபோன்ற திட்டங்களின் வாயிலாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாட்டில் மீண்டும் ஒரு கல்விப் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset