நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதியை பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்: டத்தோ அன்புமணி

 

ஷாஆலம் -
இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதியை பெறுவதற்கு அக்கழகங்கள் முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் இதனை கூறினார்.

மலேசிய வரலாற்றில் முதல் முறையாக இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டுறவு கழகங்களுக்கு 30 ஆயிரம் ரிங்கிட் உதவி நிதி வழங்கப்படும் என துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய கூட்டுறவு கழகங்கள் முறையாக விண்ணப்பித்து வருகின்றன.

அதே வேளையில் பல கூட்டுறவு கழகங்கள் விண்ணப்பதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண அக்கழகங்கள் அருகில் உள்ள கூட்டுறவு ஆணையங்களின் உதவியை நாடலாம்.

எது எப்படியிருந்தாலும் விண்ணப்பங்களுக்கான ஆவணங்கள் முறையாக இருக்க வேண்டும்.

மிட்லண்ட்ஸ் கூட்டுறவு கழகத்தின் 73ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்த டத்தோ அன்புமணி இதனை கூறினார்.

மிட்லண்ட்ஸ் கூட்டுறவு கழகத்தின் தலைவர் ஏஎன் வேலு உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் உள்ள அனைத்து இந்திய கூட்டுறவு கழகங்களும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்.

குறிப்பாக அரசாங்கத்தின் திட்டங்களை இக்கழகங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset