நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களின் குரலாக இருக்கும் மலேசிய இந்திய குரல் இயக்கம் யாருக்கும் துதிப்பாடாது: கணபதிராவ்

கோலாலம்பூர்:

இந்தியர்களின் குரலாக இருக்கும் மலேசிய இந்திய குரல் இயக்கம் யாருக்கும் துதிப்பாடாது.

அவ்வியக்கத்தின் ஆலோசகரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதிராவ் இதனை கூறினார்.

மலேசிய இந்தியர்களின் விடிவெள்ளியாக விளங்கி வரும் மலேசிய இந்தியர் குரலின் 17 ஆம் ஆண்டு எழுச்சி விழா இன்று பத்துமலை பெருமாள் கோவிலில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்கு பின்னர் எழுச்சி விழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, பினாங்கு இந்திய குரல் தலைவர் சத்யா, சிலாங்கூர் மாநில இந்தியர் குரல் தலைவர் மணிமாறன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் நாராயணன் , பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் ஜோனதன் வேலா, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸாவின் சிறப்பு அதிகாரி முகமட் மகாதீர் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணி நாட்டில் மாபெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்தியது.

ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலையென திரண்டு உரிமைக்காக போராடினர்.

இந்தப் போராட்டத்தில் சிறை வாசம் அனுபவித்த ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களில் இன்னமும் மக்களால் பேசப்படும் ஒரு தலைவராக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் விளங்கி கொண்டிருக்கிறார்.

இந்திய சமுதாயத்திற்காக இன்னமும் நாடாளுமன்றத்தில் துணிச்சலாக குரல் கொடுத்து போராடி வருகிறார்.

அவரின் தலைமையில் இன்று காலையில் நடைபெற்ற எழுச்சி விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர் குரல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், இந்நாட்டில் இந்திய சமுதாயத்திற்காக மலேசிய இந்தியர் குரலின் தொடர்ந்து ஒலிக்கும் என்று முழங்கினார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்கு இந்திய சமுதாயம் முழு ஆதரவு வழங்கியது.

இருப்பினும் இந்த அரசாங்கத்தில் இந்தியர்கள் புறக்கணிக்கக்கூடாது.

தவறுகள் நடந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு பல திட்டங்களை வகுத்து நிறைவான சேவையை வழங்கினேன் என்று அவர் சொன்னார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset