நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியா இடைக்கால அதிபர் பதவியிலிருந்து ஹன் டக்-சூ இராஜினாமா: தென்கொரியா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு 

சியோல்: 

தென்கொரியா நாட்டின் இடைக்கால அதிபர் ஹன் டக்-சூ தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். 

எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் தென்கொரியா நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஹன் டக் சூ அறிவித்துள்ளார். 

தென்கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து அந்நாட்டில் அரசியல் நெருக்கடி சுமூகமாக காணப்படவில்லை. 

இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் தென்கொரியா அதிபர் தேர்தலில் தாம் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

வேட்பாளர் பதிவு எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஹன் டக்- சூ இதற்கு முன் தென்கொரியா நாட்டின் பிரதமராகவும் அமெரிக்காவுக்கான தென்கொரியா தூதராகவும் பதவி வகித்து வந்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset