நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்

லிமா:

பெருவின் ஆண்டீஸ் மலைத்தொடரில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.

நேற்று நடந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் லிமாவிலிருந்துலா மெர்செட் நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் 60-க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக நம்பப்படுகிறது.

வலைவாகவும் குறுகலாகவும் இருந்த சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து தடம் மாறிச் சென்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

மாண்டவர்களை அடையாளம் காணும் பணியும் விபத்து குறித்த விசாரணையும் தொடர்கிறது.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset