நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு

பெய்ஜிங்:

சீனாவில் குறிப்பாக தென் சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அப்பகுதியில் நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 4,000-யைத் தாண்டியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வரும் நோய்த் தொற்றுச் சம்பவங்களால் குவாங்டோங் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலையும் கடுமையான மூட்டு வலியையும் ஏற்படுத்தும் சிக்குன்குனியாவினால் இறப்புகள் அரிதாகவே நிகழ்கின்றன என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்தது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவின் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் 10,000 யுவான் (சுமார் 1,780 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset