நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனம் தனி நாடு: பிரான்ஸ் அங்கீகாரம்

பாரிஸ்: 

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக   பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார்.
காஸாவில் பாலஸ்தீனர்களை மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் கொடூரமாக கொன்று வரும்நிலையில் பிரான்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்த அமெரிக்க தலையீட்டின் பேரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார்.

மத்திய கிழக்கில் அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்.

வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிடுவேன்.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இன்றைய அவசர முன்னுரிமை. அமைதி சாத்தியம். உடனடி போர்நிறுத்தம் செய்து, அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்க வேண்டும். மேலும் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை.

பாலஸ்தீன அரசை வலுப்படுத்த வேண்டும். அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். வேறு வழியில்லை. பிரான்ஸ் மக்கள் மத்திய கிழக்கில் அமைதியை விரும்புகிறார்கள். நாம் அமைதியை அடைவோம் என்று மேக்ரான் கூறினார்.

இதற்கு அமெரிக்கா. இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset