நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்

ரோம்:

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தின் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா, அவரது 60 வயதான தோழி ஆன் மரியா டி ஸ்டெஃபானோ ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

ப்ரீசியா ஆர்.ஜி. மாடல் இலகுரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தைப் பதிவு செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset