
செய்திகள் உலகம்
ரஷ்யாவில் 50 பேரை ஏற்றிச்சென்ற விமானம் வெடித்து சிதறியது: யாரும் உயிர்பிழைத்ததாக அறிகுறி இல்லை
மாஸ்கோ:
ரஷ்யாவில் 50 பேரை ஏற்றிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
அமுர் (Amur) என்ற வட்டாரத்தில் விபத்து நடந்தது. அதில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லையென்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அன்காரா ஏர்லைன்ஸுக்குச் (Angara Airlines) சொந்தமான விமானம் பிளாகோவெஷ்சென்ஸ்க் (Blagoveshchensk) என்ற நகரிலிருந்து டின்டா (Tynda) என்ற இடத்துக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது ரேடாரிலிருந்து காணாமல் போனது.
விமானத்தைக் கண்டுபிடிக்க மீட்பு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.
பிறகு டின்டாவிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைச்சரிவில் விமானம் மோதி வெடித்து சிதறி உள்ளது. அங்கு விமானம் எரிந்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் காட்டுப்பகுதியிலிருந்து புகை வெளியேறும் காணொலிகளை ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர்.
சம்பவ இடத்துக்கு மீட்புப்படை அனுப்பப்பட்டிருப்பதாக அமுர் வட்டாரக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி சொன்னார்.
இப்போதைக்கு 25 மீட்புப்பணியாளர்களும் 5 உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன. 4 விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வான்வழியாகவும் தேடல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விபத்தைப் பற்றி அன்காரா ஏர்லைன்ஸ் கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
July 26, 2025, 2:57 pm
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
July 26, 2025, 10:11 am
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்
July 26, 2025, 9:52 am
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
July 25, 2025, 4:31 pm
பாலஸ்தீனம் தனி நாடு: பிரான்ஸ் அங்கீகாரம்
July 25, 2025, 11:50 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான எல்லையில் மோதல்: 14 பேர் மரணம்
July 24, 2025, 2:54 pm