நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னிலையில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி

செக்கின்சான்: 

தேசிய முன்னிலையில் (BN) மஇகாவின் நிலைப்பாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள பிஎன் உச்ச கவுன்சில் கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்படும் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி கூறினார். 

அவர் இந்த பிரச்சினை 2025 ஆம் ஆண்டு அம்னோ பொதுச் சபை (PAU) உடன் தொடர்புடையது அல்ல என்று வலியுறுத்தினார்.

அவரைப் பொறுத்தவரை, அம்னோவில் மஇகாவின் நிலை ஒன்றுதான். ஏனெனில் இரண்டும் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்.

"எனவே அடுத்த ஆண்டு ஜனவரியில்தேசிய முன்னணியின் உச்ச மன்ற கூட்டம் நடைபெறும். அப்போது இதுகுறித்து நாங்கள் முடிவு செய்வோம்," என்று அவர் கூறினார்.

துணைப் பிரதமராகவும் இருக்கும் அவர், ம இ காவின் நிலை குறித்து விவாதிக்க 2025 UMNO உச்சமன்ற கூட்டத்தில் அவசர தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்டபோது இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset