நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாகிஸ்தான் - இந்திய எல்லைகளில் உள்ள பள்ளிவாசல்களில் பாங்கோசை நிறுத்தப்படுள்ளது: போர் மேகம் சூழ்கிறதா?

புதுடெல்லி: ​

காஷ்மீரின் பஹல்​காமில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதலால் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு இந்​தியா பதிலடி கொடுக்​கும் என்று பாகிஸ்​தான் எதிர்​பார்க்​கிறது. அதற்​கேற்ப முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை பாகிஸ்​தான் எடுத்து வரு​கிறது.

அதன் ஒரு கட்​ட​மாக பாகிஸ்​தான் எல்​லைகளில் உள்ள பொது​மக்​களை வேறு இடங்​களுக்கு மாற்​றிய​தாக தெரி​கிறது. 

ஏனெனில், ஜம்மு காஷ்மீர் எல்​லைக்கு அப்​பால் பாகிஸ்​தானின் எல்​லை​யில் பல பள்ளிவாசல்​கள் உள்​ளன. அங்கு 5 வேளை தொழுகைக்கு முன்பு பாங்கு ஒலிக்​கப்​படும். அந்த ஒலி இந்​திய எல்​லைகளி​லும் கேட்​பதுண்​டு.

அந்த பாங்கு ஒலியை காஷ்மீர் எல்​லை​யில் பாது​காப்பு பணி​யில் உள்ள ராணுவத்தினரும் கேட்​பதுண்​டு. இந்​நிலை​யில், பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு இந்த பாங்கு ஒலிகள் கேட்​பது இல்லை என இந்​திய எல்​லைகளில் இருந்து தகவல்​கள் வரு​கின்​றன. 

இது​போன்ற சூழல், கார்​கில் போரின் போதும் இருந்​தது. கார்​கில் போருக்கு பிறகு தற்​போது மீண்​டும் எல்​லையின் பாகிஸ்​தான் மசூ​தி​களில் பாங்கு ஒலி நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதே​நேரத்​தில் எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் ராணுவ​மும் பாது​காப்​பு​களை பலப்​படுத்தி இருப்​ப​தாக தெரி​கிறது. ஜம்​மு​வின் ஆர்​.எஸ்​.புரா செக்​டார், கார்​கில் எல்​லைப் பகு​தி​களில் தற்​போது அமைதி காணப்​படு​கிறது. 

ஆர்​.எஸ்​.புரா செக்​டாருக்கு அப்​பால் பாகிஸ்​தானில் சியால்​கோட் பகுதி உள்​ளது. இங்​குள்ள கஜ்ரி​யால், உன்ச்சி பெயின்​ஸ், கெய்​சரி, கூன்ஸ் உள்​ளிட்ட பல கிராமங்​கள் உள்​ளன. இந்த கிராமங்​களில் இருந்து பகல் நேரங்​களில் கேட்​கும் பாங்கு ஒலிகளும் தற்​போது கேட்​ப​தில்​லை.

அதே​போல், எல்​லைகளில் உள்ள வயல்​வெளி​களில் பாகிஸ்​தான் விவ​சா​யிகள் வேலை செய்​யும் நடவடிக்​கைகளும் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. சிலர் கால்​நடைகளை இந்​திய எல்​லைகளுக்கு மிக அரு​கில் மேய வைப்​பது வழக்​கம். 

அதை​யும் பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு காண முடிய​வில்லை என இந்​திய எல்​லை​யோர கிராம மக்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

ஆதாரம்: தி ஹிண்டு

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset