
செய்திகள் மலேசியா
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
இந்த தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
இதற்கு மஇகாவும் தனது பங்குக்கு களத்தில் இறங்கி இந்திய சமூகத்திற்கு பல உதவிகள் செய்து வருவதாக அவர் கூறினார்.
தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் உழைப்பே அவர்களின் மூலதனம். அதன் மூலமே அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக உயர முடியும்.
எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அவரையும் அவர் செய்யும் தொழிலையும் நாம் மதிக்க வேண்டும். கௌரவிக்க வேண்டும்.
எந்தத் தொழிலையும் நாம் தாழ்வாகவோ, தரக் குறைவாகவோப் பார்க்கக் கூடாது. இன்றைக்கு உலகில் உள்ள செல்வச் செழிப்புகள் அனைத்தும் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இன்றைக்கு நமது இந்திய சமூகத்தில் பலர் செல்வச் செழிப்போடும், பல வசதிகளோடும், உயர்ந்த தொழில் நிபுணர்களாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கான அடிப்படைக் காரணம் நமது மூதாதையர்கள் சாதாரண தொழிலாளர்களாக, ரப்பர் தோட்டங்களிலும், துப்புறவுத் துறைகளிலும் வழங்கிய உழைப்புதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 6:06 pm
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2025, 5:09 pm
அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தில் திருத்தம்; அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும்: ஃபஹ்மி
April 30, 2025, 5:09 pm
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மெத்தனமாக இருக்க வேண்டாம்: பிரதமர் எச்சரித்தார்
April 30, 2025, 5:04 pm