நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முட்டை விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் மானியத்தை திரும்பப் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது: ஃபஹ்மி

புத்ராஜெயா:

கோவிட்-19க்கு பிறகு முட்டை விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் அதன் மானியத்தை திரும்பப் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

கோவிட்-19 காலக்கட்டத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்படுகள் பல ஆண்டுகளாக முட்டை  உற்பத்தியை சீர்குலைத்தது.

இதனைத் தொடர்ந்து முட்டை விநியோகச் சங்கிலி இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகளைக் காட்டியதை அடுத்து, முட்டைகளுக்கான மானியத்தை திரும்பப் பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில், முட்டை விலைகள் தொற்றுநோய்களின் போது மட்டுமே மானியம் வழங்கப்பட்டன.

இது விநியோகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தியது என்பதை அமைச்சர்களுக்கு நினைவூட்டப்பட்டது.

எனவே விநியோகம், இருப்பு நேர்மறையான போக்கைக் காட்டியதால், செலவை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், விநியோகம் இப்போது தேவையை விட அதிகமாகிவிட்டதைக் கருத்தில் கொண்டும் அமைச்சரவை திரும்பப் பெற முடிவு செய்தது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

முன்னதாக, இந்த ஆகஸ்ட் 1 முதல் முட்டை மானியத்தை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset