
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மெத்தனமாக இருக்க வேண்டாம்: பிரதமர் எச்சரித்தார்
புத்ராஜெயா:
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு எச்சரித்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடைத்தேர்தல் வெற்றி பெற்றிருப்பது, சௌகரியமாக உணர ஒரு சீட்டு அல்ல.
மாறாக இந்த வெற்றி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான உந்துதலாக இருக்க வேண்டும்.
ஆயர் குனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதற்கு பிரதமரின் வாழ்த்துக்களுடன் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
இந்த முடிவால் நிம்மதி அடைய வேண்டாம். மாறாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் கேட்டுக் கொண்டார்.
வாக்காளர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், குறிப்பாக இளம், மலாய் வாக்காளர்களிடையே இது ஒரு நேர்மறையான அறிகுறியைக் கொடுத்ததாக அவர் கூறினார்.
20 மாவட்ட வாக்குச் சாவடி மையங்களில் 19 மையங்களை தேசிய முன்னணி வென்றது.
ஒரு மையத்தில் மட்டுமே தேசியக் கூட்டணி வென்றது. அதுவும் குறைந்த பெரும்பான்மையுடன் என்று ஃபஹ்மி விளக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 6:06 pm
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2025, 5:09 pm
அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தில் திருத்தம்; அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும்: ஃபஹ்மி
April 30, 2025, 5:04 pm