
செய்திகள் மலேசியா
மியன்மார் நாட்டில் அமைதியை நிலைநாட்ட மலேசியா எடுக்கும் முயற்சிகளுக்குக் கம்போடியா, சிங்கப்பூர் ஆதரவு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல்
கோலாலம்பூர்:
மியன்மார் நாட்டில் அமைதியை நிலைநாட்ட 2025 ஆசியான் தலைவராக மலேசியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆசியான் பிராந்திய நட்பு நாடுகளான கம்போடியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மியன்மார் நாட்டில் மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்று சேர்வதை இது உறுதிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கம்போடியா பிரதமர் ஹுன் மனெட், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஆகியோருடன் தொலைப்பேசியில் பிரதமர் அன்வார் உரையாடியிருந்தார்.
இரு நாடுகளும் ஆதரவு வழங்கியிருப்பதால் அதனை முழுமனத்துடன் வரவேற்பதாக தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 6:06 pm
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2025, 5:09 pm
அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தில் திருத்தம்; அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும்: ஃபஹ்மி
April 30, 2025, 5:09 pm
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மெத்தனமாக இருக்க வேண்டாம்: பிரதமர் எச்சரித்தார்
April 30, 2025, 5:04 pm