நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தில் திருத்தம்; அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும்: ஃபஹ்மி

புத்ராஜெயா:

2012 ஆம் ஆண்டு அமைதியான கூட்டச் சட்டத்தில் திருத்தங்கள் அக்டோபர் மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் அமைதியாக ஒன்றுகூடும் உரிமையை இந்த திருத்தம் மேலும் வலுப்படுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார்.

இந்தத் திருத்தங்கள் மக்கள் ஒன்றுகூடும் உரிமையை வலுப்படுத்த அனுமதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் இன்று அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ​​அமைதியான கூட்டங்களுக்கான 99 சதவீத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்ததாகக் கூறினார்.

இது 2022 முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கான மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை.

எனவே இது நாம் கூர்ந்து கவனிக்கும்போது ஊக்கமளிக்கும் ஒரு புள்ளிவிவரம் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரான ஃபஹ்மி கூறினார்.

முன்னதாக, பிப்ரவரி 13 அன்று மக்களவை அமர்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset