நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் அரிய வகை குரங்குகள், ஆமைகள் கடத்தல் தொடர்பாக இந்திய நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு

சிப்பாங்:

கோலாலம்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு  அரிய வகை குரங்குகள், ஆமைகள்  கடத்தி செல்ல முயன்ற இந்திய நாட்டவர்கள் மீது இன்று சிப்பாங்  செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் செல்வம், நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஓத்மான் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது,

இரண்டு குற்றச்சாட்டுளையும் மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார்.

21 வயது மாணவருமான அவருக்கு ஆங்கிலம் புரியாததால், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டுகளை தமிழில் வாசிக்கப்பட்டது.

முதல் குற்றச்சாட்டாக, சிறப்பு அனுமதி இல்லாமல் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான கிப்பனை குரங்குகளை ஏற்றுமதி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டாக, சிறப்பு அனுமதி இல்லாமல் பாதுகாக்கப்பட்ட இனமான ஆறு அல்பினோ மஞ்சள் தலை ஆமைகளை ஏற்றுமதி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டு குற்றங்களும்  கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு கேஎல்ஐஏ  முனையம் 1, கேட் சி34 இல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதே போன்று தமிழ் நாட்டின் பண்போலியைச் சேர்ந்த அப்துல் ஜாஃபர் மொஹிதீன் அப்துல் காதர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset