நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யார் என்ன பேசினாலும் அது இந்து சமயத்தைப் பாதிக்காது; ஒற்றுமையாக சமயத்தைப் பாதுகாப்போம்: டத்தோ சிவக்குமார்

நிபோங் திபால்:

யார் என்ன பேசினாலும் அது இந்து சமயத்தைப் பாதிக்காது. ஒற்றுமையாக சமயத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

நிபோங் திபால் இஸ்கான் ஆலய திறப்பு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. புதிதாக கட்டப்பட்ட இவ்வாலயம் மிகவும் அழகாக  உள்ளது.

மேலும் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு மதம்,  பிரார்த்தனைகளைப் பற்றி கற்பித்ததற்காக இஸ்கானுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்..

மேலும் இஸ்கான் ஆலய கட்டுமானத்திற்கு  உதவிய அனைத்து ஆதரவாளர்கள்,  நன்கொடையாளர்களுக்கும்  நன்றி என்று அவர் கூறினார்.

தற்போது இந்து சமயம், ஆலயம் குறித்து அவதூறாக பேசுவது ஒரு தொடர் கதையாகி விட்டது.

குறிப்பாக கோவில் ஹராம் என்ற வார்த்தை இந்து மக்களின் மனதை தொடர்ந்து புண்படுத்தி வருகிறது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் எனும் கீதாசாரத்திற்கு ஏற்ப எல்லாம் நன்மைக்கே என நம்புவோம்.

யார் என்னா பேசினாலும் செய்தாலும் அது எந்தவொரு சூழ்நிலையிலும் இந்து சமயத்தை பாதிக்காது.

ஆகவே இந்து மக்கள ஒற்றுமையாக இருந்து இந்து சமயத்தை வளர்ப்போம் பாதுகாப்போம் என்று டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset