நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போயிங் நிறுவனத்தைக் குற்றம் சாட்டிய அமெரிக்க பொறியியலாளர் சாம் சலேபோர்

வாஷிங்டன்: 

போயிங் விமானங்களின் உற்பத்தி செயல்முறையிலுள்ள குறைப்பாடுகள் விமான விபத்திற்கு வித்திடும் என்று பொறியியலாளர் சாம் சலேபோர் பேசும் காணொலி தற்போது மீண்டும் வைரலானது. 

'போயிங் 787 ட்ரீம்லைன்லர்'  விமான திட்டத்தில் பணிபுரிந்த அமெரிக்க பொறியியலாளர் சாம் சலேபோர் இந்த விமானங்கள்  காலப்போக்கில் பெரும் விபத்தில் சிக்கும் என்பதை பல்வேறு பேட்டிகள், செனட் சபை கடந்தாண்டு பேசியுள்ளார். 

Fuselage எனப்படும் விமானப் பாகங்களை இணைக்கும் போது, சரியான இணைப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை.

பொருந்தாத பாகங்களின் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றைச் சரிசெய்தனர். 

இது விமானத்தின் பாகங்களில் கண்ணுக்கு தெரியாத இடைவெளிகளை உருவாக்கும் என்று தாம் பலமுறை கூறியதை போயிங் நிறுவனம் அலட்சியம் செய்ததாக அவர் குறிப்பிட்டார். 

மேலும், மாசுபடிந்த குழாய்கள் விமானத்தின் ஆக்சிஜன் அமைப்பில் பொருத்தப்படுகின்றன. அவர் முறையாக சுத்திகரிக்கப்படாவிட்டால் பெரும் வெடி விபத்துக்கும் வழி வகுக்கும் என்று தாம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset