நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் 

ஹைதராபாத்:

தென் மாநிலங்களில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தவிர்க்க கூடிய வாய்ப்பிருந்தும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

பெரும்பாலும் சுகப்பிரசவத்திற்கு சாத்தியம் இல்லாதவர்களுக்கு முன்கூட்டியே மருத்துவரால் சிசேரியன் முறை தேர்வு செய்யப்படும். அப்படி இல்லையென்றால் சுகப்பிரசவத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது கைகொடுக்காத நிலையில் அவசர அவசரமாக சிசேரியன் முறை தேர்வு செய்யப்படும். அப்படி எந்த சிக்கலும் இல்லாத போதும் திடீரென திட்டமிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளது.

சுமார் 21,500 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 44.3% பெண்கள் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுகொண்டது தெரியவந்துள்ளது. அதில் 13.9 % பெண்கள் எந்த அவசர நிலையும் இல்லாமல் மருத்துவ சிக்கல்கள் இல்லாமல் சிசேரியன் சிகிச்சை முறையை மேற்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தரவுகள் அதிர்சியளிக்கும் விதமாக உள்ளது.

தெலங்கானாவில் அதிகபட்சமாக 8.4% பெண்கள் தவிர்க்க கூடிய வாய்ப்பு இருந்தும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொண்டுள்ளனர்.

தென் மாநிலங்களில் 96.5 % கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 25-34 வயதுடைய பெண்கள் அதிகமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர். 

அதிலும் படித்த பெண்களே அதிகமாக இந்த முறையில் குழந்தை பெற்றுகொள்வதாகவும், முதல் குழந்தையை பெற்றுகொள்ளும் பெண்கள் சிசேரியன் முறையை அதிகம் நாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தவிர்க்க கூடிய வாய்ப்பிருந்தும் சிசேரியன் செய்வதால் அறுவை சிகிச்சைக்குள் ஏற்படும் ஆபத்து, அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் சிக்கல்களால் தாய், குழந்தையின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகலாம் என கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset