நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்

புதுடெல்லி: 

இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. 

அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ஆம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் இன்று (ஏப்.27) நிறைவடைகிறது. 

மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முடிவுகளால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பாகிஸ்தானியர்கள் அமிர்தரஸில் உள்ள வாகா - அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி வருகின்றனர். 

அவர்களின் இந்திய உறவினர்களும் அட்டாரி எல்லைக்கு வந்து தங்களின் கண்ணீருடன் வெளியேறுபவர்களை வழியனுப்பி வருகின்றனர்.

அவர்களில் பலர் மருத்துவத்துக்காக இந்தியா வந்த நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset