நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பா வாழ் இந்தியர்கள் தேசிய முன்னணி பக்கம் நின்றது நமது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

தாப்பா வாழ் இந்தியர்கள் தேசிய முன்னணி பக்கம் நின்றது நமது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் யுஸ்தி பக்கீர் 10,971 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இவ்வெற்றியின் மூலம் ஆயிர் கூனிங் சட்டமன்றத்தை தேசிய முன்னணி மீண்டும் தற்காத்துக் கொண்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலை காட்டிலும் கூடுதல் வாக்கு, கூடுதல் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் தோல்வி கண்ட இடங்களில் கூட இம்முறை தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக இந்திய வாக்காளர்கள் முழுமையாக தேசிய முன்னணி பக்கம் நின்றுள்ளனர்.

இது நமது சேவைக்கு கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.

இவ்வேளையில் தேசிய முன்னணிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளருக்கும் எனது நன்றி.

வெற்றி பெற்ற யுஸ்ரி பக்கீருக்கு எனது வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset