நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிக்கூடங்களில் இலக்கவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு கல்விகளை முதன்மைப்படுத்த வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல் 

கோலாலம்பூர்: 

பள்ளி அளவில் இலக்கவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு கல்விகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

மின்கடத்தி, தரவு மையம், செயற்கை நுண்ணறிவு போன்ற விஷயங்களில் மலேசியா முன்னோக்கி இருப்பதால் மாணவர்கள் இந்த புதிய கல்வி அறிவுகளைப் பெற்றிருப்பது அவசியமாகிறது என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இலக்கவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை மாணவர்கள் கற்க வேண்டும். இதுவே எதிர்கால தொழில்நுட்பத்திற்குப் பெரும் உறுதுணையாக விளங்கும் என்று அன்வார் சொன்னார் 

பல்கலைக்கழகங்களில் இந்த செயற்கை நுண்ணறிவு கல்வி தற்போது இடம்பெற்று வருகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு புலம், துறைகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset