நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 54.01% வாக்குப்பதிவு

தாப்பா:

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 54.01% வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வந்தனர்.

தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

63 முகப்பிடங்களை கொண்ட 19 வாக்குச் சாவடிகளும் காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.

மொத்தம் 18 வாக்குச்சாவடி மையங்கள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

அதே வேளையில் தோ தந்தேவா தேசிய பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம் மாலை 4 மணிக்கு மூடப்படும்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமாக  74.85 சதவீதம் வாக்குப் பதிவை எட்டியது.

இன்றைய வாக்களிப்புச் செயல்பாட்டில் 31,281 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset