நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் கழங்கங்களுக்கு உதவ மித்ராவின் கீழ் நிதித் திட்டம்; விரைவில் அறிவிக்கப்படும்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் கழங்கங்களுக்கு உதவ மித்ராவின் கீழ் நிதித் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரன் இதனை கூறினார்.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இயக்கத்தினர் தலைவன் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு இதுபோன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது.

அதே வேளையில் பல்கலைக்கழகங்களில் செயல்படும் இந்திய மாணவர்கள் கழகங்கள் பல்வேறான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெறும் நோக்கில் தான் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஆனால இந்நிகழ்ச்சிகளை நடத்த நிதிக்காக அம்மாணவர்கள் பலரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இப்பிரச்சினைக்கு தீர்வு கானும் நோக்கில் மித்ராவின் கீழ் சிறப்பு நிதித் திட்டம் உருவாக்கப்படும். அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வரும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset