நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் செயல்பாடுகள் காரணமாக 13 வயதுக்குட்பட்டவர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிப்பு

லோலாலம்பூர்:

பாலியல் செயல்பாடுகள் காரணமாக 13 வயதுக்குட்பட்டவர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய ஏய்ட்ஸ் மன்றம், மலேசிய ஏய்ட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் கௌரவச் செயலாளர் டாக்டர் ஜைதோன் யஹாயா கூறினார்.

13 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கூட பாலியல் செயல்பாடு காரணமாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த நிலை பல்கலைக்கழக, பள்ளி மாணவர்களிடையே தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கும் பங்களிக்கிறது.

அவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 29 வயதுடையவர்கள் என்றும், எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களில் 44% பேர் என்றும் அவர் கூறினார்.

13 முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவர்களில், நான்கு சதவீதத்தினருக்கு எச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பெரும்பாலும் பாலியல் செயல்பாடுகளே இதற்கு  காரணம்.

பள்ளி, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இதற்கு பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் குறித்து தெரியாது.

ஆனால் ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாங்கள் தொடர்ந்து நடத்துவதால், மருந்துகளால் ஏற்படும் எச்.ஐ.வி தொற்று குறைந்து வருவதாகக் காணப்படுகிறது.

பாலியல் ரீதியாக பரவும் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருவதால், நோயாளிகள் எங்கு உதவி பெறுவது என்பதை அறியும் வகையில் விழிப்புணர்வு திட்டங்களை தனது துறை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset