நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இளைஞர் உருமாற்ற  திட்டங்களுக்கு  இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு துணை நிற்கும்: ஹன்னா இயோ 

களும்பாங்:

மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இளைஞர் உருமாற்ற  திட்டங்களுக்கு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு துணை நிற்கும்.

அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.

மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மைஸ்கில் அறவாரியம் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள களும்பாங்கில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் உலு சிலாங்கூர் இளைஞர்களுடன் பூப்பந்து பயிற்சி பயிற்சி திட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது என்று  ஹன்னா இயோ தெரிவித்தார்.

மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் விளையாட்டாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில்,

பூப்பந்து போட்டியில்  முன்னாள் தேசிய வீரர் ஹாஜி ரோஸ்லின்  கலந்து கொண்டஉ  பயிற்சியை வழங்க முன்வந்திருப்பதும் பாராட்டிற்குரியது.

இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் திறமையை வளர்க்கவும் ஆதரவு நல்கும் வகையில், டத்தோ வீரா லீ சோங் வெய்  போட்டியாளர்கள் அனைவருக்கும் வழங்கிய பூப்பந்து ரெக்கெட்  இன்னும் அர்த்தமுள்ளதாக.

கிராமப்புற இளைஞர்கள் தரமான பயிற்சியைப் பெறுவதற்கு, இது போன்ற முயற்சி, நிச்சயம் துணைபுரியும்.

இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் கொண்டுள்ள ஆர்வத்தை வளர்ப்பதிலும் முன்னெடுப்பதிலும் சிறந்த முறையில் பங்காற்றிவரும் ரோஸ்லின், மைஸ்கில்ஸ் அறக்கட்டளை பொறுப்பாளர்கள், டத்தோ வீரா லீ சோங் வெய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது 
என்று அவர் கூறினார்.

மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் தலைவர் வழக்கறிஞர் சி.பசுபதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சொக் தாவ், தேசிய இளைஞர் கூட்டுறவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாரிஸால்  உட்பட அதிகமானோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset