நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும்: உமா காந்தன்

பெட்டாலிங்ஜெயா:

உயர் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும்.

புரட்சி இயக்கத்தின் தலைவர் உகா காந்தன் இதனை வலியுறுத்தினார்.

புரட்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் தலைவன் எனும் இந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாநாடு இன்றும் நாளையும் பெட்டாலிங் ஜெயா பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரியில் நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட 25 பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்களை கண்டறியும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மாணவர்களிடையே ஒரு நெட்வோர்க்கிங்கை உருவாக்கும் நோக்கிலும் இது நடத்தப்படுகிறது.

என்னை பொருத்த வரையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது.

உங்களின் நலனுக்காக நடத்தப்படும் மாநாட்டில் கலந்து கொள்வதில் காட்டும் அலட்சியம் வரும் காலங்களில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

ஆகவே நாளையும் நடைபெறும் மாநாட்டில் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று உமா காந்தன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset