
செய்திகள் மலேசியா
மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க பினாங்கு மாநில அரசு முன்வந்துள்ளது
ஜார்ஜ்டவுன்:
மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க பினாங்கு மாநில அரசு முன்வந்துள்ளது என்று பினாங்கு மாநில முதலமைச்சர் கௌ கொன் இயோ கூறினார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே மாநில சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு, சுகாதார செயற்குழு தலைவர் டேனியல் கூய் தாக்கல் செய்வார் என்று சௌ கொன் இயோ சொன்னார்.
முன்னதாக, திரெங்கானு மாநிலத்தில் மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும் என்று மாநில அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களும் மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய முன்வந்துள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2025, 5:13 pm
இது ஒரு பகற்கனவு அல்ல; அது ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது: மொஹைதின்
April 26, 2025, 5:12 pm
பாலியல் செயல்பாடுகள் காரணமாக 13 வயதுக்குட்பட்டவர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிப்பு
April 26, 2025, 4:39 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 54.01% வாக்குப்பதிவு
April 26, 2025, 4:38 pm