நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள் வாழும் இடங்களில்  தமிழர் திருநாள் பரவலாக நடத்தப்பட வேண்டும்: முருகன்

சிகாம்புட்:

தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழர் திருநாள் பரவலாக நடத்தப்பட வேண்டும்.

மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் முருகன் மணியம் இதனை கூறினார்.

கூட்டரசுப் பிரதேச தமிழ் இளைஞர் மணிமன்றம், சிகாம்புட் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து தமிழர் திருநாளை ஏற்பாடு செய்திருந்தது.

பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக பல தமிழர் பாரம்பரிய நிகழ்ச்சிகள், போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவை தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகத்தின் தமிழவேள் கோ. சாரங்கபாணி அறவாரிய உறுப்பினர் டான்ஶ்ரீ குமரன் தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

நமது தமிழர் பாரம்பரிம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதற்கு இருபோன்ற விழாக்கள் மிகவும் முக்கியம்.

அதன் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழர் திருநாள் பரவலாக நடத்தப்பட வேண்டும்.

இதுவே எனது வேண்டுகோள் என்று முருகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset