நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி

கோலாலம்பூர்: 

நாட்டின் தலைமையின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கும், அரசியல் அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் பாஸ் தொடர்ந்து போராடும் என்று பாஸ் கட்சியின் மத்திய தேர்தல் இயக்குனர் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முஹம்மது நோர் கூறினார். 

இஸ்லாமிய போதனைகளை அடிப்படையாகக் கொண்டிராத நிர்வாக முறையால் ஏற்படும் அடக்குமுறை, அநீதியிலிருந்து நாட்டையும் உலகையும் இஸ்லாம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கூறினார்.

நாட்டின் அரசியல் அமைப்பின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான பாஸின் போராட்டம் தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் என்று கெடா மந்திரி புசார் மேலும் கூறினார்.

“எனவே, நாட்டைக் கைப்பற்றுவதற்கும் அரசியல் அமைப்பின் மீது மீண்டும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் போராட்டங்களை பாஸ் முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும், சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் சரி என்று அவர் தெரிவித்தார்.

“நம்பிக்கை கொள்ளுங்கள் - இஸ்லாம் மட்டுமே இந்த உலகத்தைக் காப்பாற்ற முடியும். அதற்கு அப்பால், பெரும்பாலான அமைப்புகள் ஊழல் நிறைந்தவை, மனிதகுலத்தை அநீதி, ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகின்றன, ”என்று அவர் கூறினார்.

கெடா மாநில பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) தலைவரான முஹம்மது சனுசி, ஆட்சியில் இஸ்லாமிய வழிகாட்டுதல் இல்லாதது இறுதியில் ஒரு நாட்டை இஸ்லாத்தை அரசியலின் அடிப்படையாக மாற்றாத கட்சிகளால் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது என்றார்.

உதாரணமாக, பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்), பாரிசான் நேஷனல் (பிஎன்) தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தின் கீழ் இந்த நிலைமை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

“இஸ்லாத்தை பின்பற்றாத ஆனால் ஆட்சி செய்யும் தலைவர்கள் விரைவில் மற்றவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நீதி, பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், இஸ்லாமிய ஆட்சி அமைய  பாஸ் தொடர்ந்து பாடுபடும் என்று முஹம்மது சனுசி கூறினார்.

“நாங்கள் இஸ்லாத்தில் உன்னதமானவர்கள், பாதுகாப்பானவர்கள். எங்கள் இதயங்கள் இஸ்லாத்தை தூய்மையாக பின்பற்றுபவை. நாங்கள் யாரையும் ஒடுக்குவதில்லை; நாங்கள் நியாயமாக, பாகுபாடு இல்லாமல் அரவணைத்து செயல்படுகிறோம், அரசாங்கத்தில் இருக்கும்போது எந்த குடிமக்களின் உரிமைகளையும் மறுக்கவில்லை. "அதுதான் இஸ்லாத்தின் கொள்கை," என்று அவர் கூறினார்.

இஸ்லாம் ஒடுக்குமுறை, பாகுபாடு, உரிமை மறுப்பைத் தடைசெய்கிறது. இஸ்லாத்தின் உரிமைகள், கண்ணியம் மீறப்படாத வரை மற்றவர்களுக்கு மரியாதை கோருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset