செய்திகள் இந்தியா
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
பீகார்:
காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதியும் அடையாளம் காணப்படுவர், தேடப்படுவர், தண்டிக்கப்படுவர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு அவர் முதல் முறையாக உரையாற்றிய அவர்,
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே துரத்துவோம். 1.4 பில்லியன் இந்தியர்களின் மன வலிமையைக் கொண்டு பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைப்போம்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 பேர் மாண்டனர். அவர்களில் 26 பேர் இந்தியர்கள். ஒருவர் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்.
25 ஆண்டில் காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆக மோசமான தாக்குதல் அது.
எல்லை கடந்த பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.
பாகிஸ்தானுடன் அரசதந்திர உறவை இந்தியா இறக்கியது. அதோடு தண்ணீர் உடன்பாட்டை ரத்துச் செய்தது.
காஷ்மீரில் தாக்குதல்காரர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களும், அதைத் திட்டமிட்டவர்களும் அவர்களின் கற்பனைக்கு எட்டாத விலை கொடுப்பார்கள் என்று இந்தியப் பிரதமர் மோடி எச்சரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
