
செய்திகள் மலேசியா
எஸ்.பி.எம் பொதுத்தேர்வு பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடி தவறாக இடம்பெற்றதா ? மலேசிய கல்வி அமைச்சு மன்னிப்பு
புத்ராஜெயா:
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வின் பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடி தவறாக இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக மலேசிய கல்வி அமைச்சு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது
சம்பந்தப்பட்ட அறிக்கையானது அமைச்சு மீண்டும் பெற்றுக்கொள்வதோடு ஜாலூர் கெமிலாங் கொடி முறையாக இடம்பெற செய்யப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது
ஜாலூர் கெமிலாங் விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக மாறிய நிலையில் அமைச்சு பொது தளத்தில் மன்னிப்பைக் கேட்ட்டுக்கொண்டது.
ஜாலூர் கெமிலாங் என்பது மலேசியாவின் முதன்மை கொடியாகும். நாட்டின் அடையாளமாக விளங்கும் ஜாலூர் கெமிலாங் மரியாதையுடன் இடம்பெற வேண்டும் என்று அமைச்சு சொன்னது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மலேசியக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am
பிரதமர் அன்வாரின் மூன்று நாடுகளுக்கான அரசு முறை பயணம் பலன் அளித்துள்ளன
July 8, 2025, 11:11 am