
செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாாளர் பிரச்சினைக்கு மே 1ஆம் தேதிக்குள் நல்ல பதில் கிடைக்குமா?: மிம்தா எதிர்பார்ப்பு
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய உலோக பொருள் மறுசுழற்சி துறையில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள் என்ற மிம்தாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.
இத்துறைக்கு கண்டிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டிக்காமை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.
மார்ச் 20 ஆம் தேதி டிக்காமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் தெரிவித்தார்.
எங்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று டிக்கம் கூறியதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.
அந்த வகையில் வரும் மே 1 ஆம் தேதிக்குள் எங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
இதனிடையே 10,000 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.
அந்த அடிப்படையில் எங்களுக்கு கண்டிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று மிம்தா செயலாளர் முத்தப்பன் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி அரசாங்கததை வலியுறுத்தி வருகிறோம்.
3டி எனப்படும் இந்த கடினமான துறையில் பணியாற்ற மலேசியர்கள் முன் வருவதில்லை.
ஆகவே எங்களின் கோரிக்கை உடனடியாக பரிசீலனை செய்து அந்நியத் தொழிலாளர்களை மே 1 ஆம் தேதிக்குள் வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்படி முத்தப்பன் கேட்டுக் கொண்டார்.
இன்று மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm