
செய்திகள் மலேசியா
உரிமையாளர்கள் வரி செலுத்தாததால் 1,082 லோட் நிலங்களை பகாங் அரசு கைப்பற்றியது: மந்திரி புசார்
குவாந்தான்:
உரிமையாளர்கள் வரி செலுத்தாததால் 1,082 லோட் நிலங்களை பகாங் மாநில அரசு கைப்பற்றியது.
பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இதனை கூறினார்.
நிலத்தை கைப்பற்றும் நடவடிக்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
நிலுவைத் தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்றுவலியுறுத்தப்படும்.
இன்று வரை, பகாங் மாநிலம் முழுவதும் 1,082 நில உரிமைகள் நில நிர்வாகிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த அபராத வருவாய் 1.4 மில்லியன் ரிங்கிட்டுக்ம் அதிகமாகும். வரி செலுத்தவில்லை என்றால் நிலத்தைக் கைப்பற்றுவோம்.
ஆனால் நாங்கள் அறிவிப்பு கொடுத்தால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவோம் என்று அர்த்தம்.
இன்று குவாந்தனில் உள்ள விஸ்மா ஸ்ரீ பகாங்கில் நடந்த பகாங் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm