நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு தைப்பூச விழாவை முன்னிட்டு LINERZ Motorsports ஏற்பாட்டில் மாபெரும் தண்ணீர் பந்தல்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கு தைப்பூச விழாவை முன்னிட்டு பால தண்டாயதபாணி கோவில் ஜாலான் உத்தாமாவில் LINERZ Motorsports ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்படவுள்ளது.

LINERZ Motorsports தலைவர் விஜயமாணிக்கம் என்ற விஜய் தலைமையில் ஜனவரி 31ஆம் தேதியும் மறுநாள் பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசத் தினத்திலும் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு பானங்களும் உணவுகளும் வழங்கப்படும்.

தண்ணீர் பந்தலுக்கு சிறப்பு வருகை புரியும் பிரமுகர்களுக்கும் சிறப்பு செய்யப்படவுள்ளது.

தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவதால் இம்முறை பினாங்கு தைப்பூசம் கோலாகலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று விஜய் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset