நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு தைப்பூசத்தில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சு வழங்கும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

பினாங்கு தைப்பூசத்தில் பல்வேறு சேவைகளை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சு வழங்கும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

முருகப் பெருமானுக்கு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் பத்துமலை தைப்பூசத்தை அடுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் தைப்பூசமாக பினாங்கு விளங்குகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி பினாங்கு தைப்பூசத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சு பல சேவைகளை வழங்க முன் வருகிறது.

அமானா இக்தியார், இன்ஸ்கேன், எஸ்கேஎம், இக்மா, பேங்க் ரக்யாத், எஸ்எம்இ பேங்க், எஸ்எம்இ கோர்ப் என அமைச்சின் கீழ் உள்ள ஒன்பது நிறுவனங்களின் பங்கேற்புடன் தைப்பூச கொண்டாட்டத்தில் சேவை மையத்தைத் திறக்கும்.

மேலும் வணிக நிதித் தகவல் விநியோகம், தொழில் முனைவோர் பயிற்சி, வழிகாட்டுதல், தொழில்முனைவோர் பதிவு, கூட்டுறவு தொடர்பான ஆலோசனை சேவைகள், ஓய்வு அறைகள், இலவச சுகாதார பரிசோதனைகள், தாய்ப்பால் கொடுக்கும் அறைகள், இலவச உணவு விநியோகம் ஆகியவை இங்கு ஏற்பாடு செய்யப்படும்.

கூட்டத்தை நிர்வகிப்பதில் உதவுவதற்கும், முதியவர்கள், குழந்தைகள் ஊனமுற்றோருக்கு உதவி வழங்குவதற்கும் 200 அமைச்சின் தன்னார்வலர்கள் திரட்டப்படுவார்கள்.

ந்த தன்னார்வலர்கள் பினாங்கில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 17 முதல் 30 வயதுடைய இளைஞர்களாவர்.

மடானி கூடாரத்தில் இலவச, வசதியான ஓய்வு அறையில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை தங்கி ஓய்வு எடுக்க முடியும்.

இந்த ஓய்வு அறை முன்னணி ஊழியர்கள், முதியவர்கள், தாய்மார்கள், குழந்தைகள், உடல்நிலை சரியில்லாத பக்தர்களுக்காக உருவாக்கப்படுகிறது.

மேலும் அமைச்சின் சார்பில் இலவச பானங்கள், உணவுகளையும் வழங்கவிருக்கிறது.

கூடுதலாக, இந்திய சமூக தொழில்முனைவோர் நிதித் திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

இந்திய சமூக தொழில்முனைவோரின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதி 30 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset