நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 3 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 3 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை  இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

இந்திய அதிகாரிகளுடன் இணைந்து ஜாக் ஸ்பாரோ என்ற பெயரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான மூன்று நபர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்படும் சந்தேக நபர்களாக உள்ளனர்.

மும்பை அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டு, இன்று மாலை சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130வி-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இது ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாதது மற்றும் இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.

இந்திய அதிகாரிகளின் நெருக்கமான ஒத்துழைப்புக்கு போலிஸ் நன்றி தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset