நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவில் ஹராம் என்ற வார்த்தையின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

கோவில் ஹராம் என்ற வார்த்தையின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் சில ஆலயங்கள் நிலம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது உண்மை தான்.
ஆனால் அதற்கான இந்த ஆலயங்களை ஒரு சிலர் தரப்பினர் எடுத்தவுடனே கோவில் ஹராம் என்று முத்திரை குத்துகின்றனர்.

சமூக ஊடகங்கள் இதை பற்றி விமர்சனம் செய்கின்றனர். விவாதம் நடத்துகின்றனர்.

இதுபோன்ற சர்ச்சைகள் இந்திய சமுதாயத்திடையே பெரும் மன வேதனையை அளிக்கிறது.

குறிப்பாக தைப்பூச விழா காலக்கட்டத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே இவ்விவகாரத்திற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரச்சினைகள் உள்ள ஆலய விவகாரங்களை அரசாங்கம் பேசி தீர்க்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset