நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒரு கிலோ பழத்தின் விலை RM 112,000: அப்படி என்ன சிறப்பு இதில்?

டோக்கியோ:

உங்களிடம் RM 112,000 மலேசிய வெள்ளி இருந்தால் நீங்கள் என்ன வாங்குவீர்கள்? தங்கம்? வைரம் அல்லது நிலத்தில் முதலீடு? இது தானே வழக்கம்.

இவ்வளவு பணம் போட்டு இந்த விலை மதிப்பிலான ஒரு ஹைப்ரிட் பழத்தை வாங்குவீர்களா? ஆனால், ஜப்பானில் வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஜப்பானில் ஒரு பழத்துக்கு எக்கச்சக்கமான டிமாண்ட் உள்ளது. அதன் விலை  கிட்டத்தட்ட RM 112,000 மலேசிய வெள்ளி. 2.7 மில்லியன் ஜப்பானிய யென். இந்திய ரூபாயில் 20 லட்சம் என்று தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. 

புதுமையான முயற்சிகள், நவீன விவசாய முறைகள் ஆகியவை அவ்வபோது வேளாண்மை மற்றும் காய்கறி, பழங்கள் சாகுபடியிலும் முயற்சி செய்யப்படுகின்றன. 

இந்த முயற்சிகள் அனைத்துமே, கிட்டத்தட்ட ஹைப்ரிட் காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்கியுள்ளன. ஹைப்ரிட் உணவுகள் என்றாலே, விலை அதிகமாகத் தான் இருக்கும். உதராணமாக, ரூபி ரோமன் திராட்சை, டெக்கோபோன் ஆரஞ்சுகள், செகாய் இச்சி ஆப்பிள் ஆகியவை விலை அதிகமான ஹைப்ரிட் உணவுகள். ஆனால், இவையெல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது, ஜப்பானில் விளையும் RM 112,000 மலேசிய வெள்ளி மதிப்புள்ள இந்த மெலன் பழம்.

Yubari King Sets Record Price for Most Expensive Melon Sold in Japan | ANUK  Mobile

அந்த பழத்தின் பெயர் யுபாரி மெலன். இந்த பழத்தைப் பற்றி வெளியாகியுள்ள செய்திகளின் படி, யுபாரி மிக மிக விலை உயர்ந்தது. இதன் விலை இன்னும் சில லட்சங்கள் கூடும் என்றும் அறியப்படுகிறது. 

அது மட்டுமின்றி, இந்தப் பழம் ஜப்பானில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது; விற்பனையாகிறது. ஆனால், உள்நாட்டு கடைகள், அங்காடிகள், சந்தைகள், பேரங்காடிகளுக்கே இந்த விலை உயர்ந்த பழம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இதன் விலை அதிகமாக இருப்பதால், சாமானியர்கள் ஒரு சிறு துண்டு பழத்தைக் கூட வாங்க முடியாது.

யுபாரி மெலன் பற்றி அவ்வபோது அறிக்கைகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்திய அறிக்கைகள் படி, தற்போது யுபாரியின் விலை RM 112,000 (20 லட்ச இந்திய ருபாய்) என்று கூறப்படுகிறது.  இதன் விலையின் காரணமாக நாட்டின் பணக்காரர்கள், அந்தஸ்து மிக்கவர்களுக்கு மட்டுமே இந்த பழம் கிடைக்கிறது. மிக மிக சிறிய அளவுகளில் விற்பனை செய்யப்பட்டாலும், உணவகங்களில் கூட பரிமாறப்படுவதில்லை.

இதன் விலை இவ்வளவு அதிகமாக இருந்தாலும் கூட, ஜப்பானில் வசிக்கும் பணக்காரர்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. பலரும், என்ன விலை கொடுத்தாவது இந்தப் பழத்தை சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனாலேயே, இதற்கு அதிக டிமாண்ட் கூடி உள்ளது.

ஜப்பானில் உள்ள யுபாரி என்ற இடத்தில் இந்த பழம் விளைவதால், அதையே பெயராக வைத்துள்ளார்கள். விலை உயர்ந்த பழத்தை அதிகப்படியாக விளைவிக்காமல், கிரீன்ஹவுஸ் முறையில் விளைவிக்கிறார்கள். வேகு பீஃப் அல்லது ஐபீரியன் ஹாம் போல, குறிப்பிட்ட இடத்தில், சூழலில் மட்டுமே (geographical indication) இது விளையும் என்பதால், இதன் விலை அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset