நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசிய நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு 

ஜகார்தா:

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. அந்தச் சம்பவத்தில் வாகனங்கள் புதையுண்டதாக மீட்புப் பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வட சுமத்ராவின் 4 மாவட்டங்களில் கடந்த வார இறுதியில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன.

அண்மை நிலவரப்படி டெலி செர்டாங் (Deli Serdang) என்ற மாவட்டத்தில் மழையை அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மாண்டவர்களில் சிலர் பயணிகள் பேருந்திலிருந்து மீட்கப்பட்டனர். பேருந்து அந்த வழியாகச் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டு அது மண்ணில் புதையுண்டதாகக் கூறப்படுகிறது.

மீட்புப் பணிகளுக்குக் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காயமுற்றனர்.

மழைக்காலத்தில் இந்தோனேசியாவில் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக நவம்பர் மாதத்துக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவதுண்டு.

ஆனால் மோசமான ஆபத்துகளைக் கொண்டுவரும் சில பேரிடர்கள் வேறு சில காலக்கட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset