நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கருணைக் கொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

லண்டன்:

மீளமுடியாத நோயில் இருப்பவர்களுக்கு மரணத்தை அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

அதன்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு மரணம் தரும் நோய் உறுதி செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் இறப்பவர்களுக்கு முன்கூட்டியே செயற்கை முறையில் மரணத்தை அளிக்க அவர் விண்ணப்பிக்கலாம்.

அவரது கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலித்து ஒப்புதல் அளித்துவிட்டால் மருத்துவ உதவியுடன் நச்சுமருந்தை அவரே எடுத்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ள வேண்டும்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 330 எம்.பி.க்களும் மசோதாவை எதிர்த்து 275 பேரும் வாக்களித்தனர். பின்னர் அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset