
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் சூதாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சூதாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூதாடிகளின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டில் இல்லாத அளவாகக் குறைந்திருப்பதாய் அண்மைய ஆய்வில் தெரியவந்தது.
பிரச்சினைக்குரிய சூதாட்டம் மீதான சிங்கப்பூர் தேசிய மன்றம் ஆய்வை நடத்தியது. மூவாயிரம் பேர் அதில் பங்கெடுத்தனர்.
40 விழுக்காட்டினர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாய்த் தெரிவித்தனர்.
சூதாட்டம் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும் சாத்தியம் சுமார் ஒரு விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரில் சூதாடுவோர்...
2023 - 40%
2020 - 44%
2017- 52%
எண்ணிக்கை படிப்படியாகக் குறைகிறது. ஆனால் தொகையோ அதிகரிக்கிறது.
சூதாட்டத்துக்காக மாதந்தோறும் சராசரியாக இப்போது ஒருவர் 25 வெள்ளிச் செலவிடுவதாய் ஆய்வு சொன்னது.
மூவாண்டுக்கு முன்னர் அது 15 சிங்கப்பூர் வெள்ளியாக இருந்தது.
அதிகம் போவது 4D. சிங்கப்பூரில் மூவரில் ஒருவர் அதற்குப் போகின்றனர்.
அடுத்து வருவது TOTO. மக்களில் 29 விழுக்காட்டினர் இதற்கு வருவதாக ஆய்வு சொல்கிறது.
இணையத்தில் சூதாடுவது அதிகரித்துள்ளது.
இணையத்தில் சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகள் சற்று அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக அதிகாரிகள் கூறினர்.
அது 0.7 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காட்டை எட்டியுள்ளது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றது அந்த மன்றம்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 9:56 am
தொடரும் இஸ்ரேலின் போர் தாக்குதல்: காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்தது
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm