நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

6 பேர் மரணம்: Tiger நிறுவனத்தின் Vodka, Whisky மதுபானங்கள் விற்க தடை 

வியன்டைன்:

லாவோஸ் அரசு உள்ளூர் மதுபான நிறுவனத்துக்குத் தடை விதித்துள்ளது.

அண்மையில் methanol நச்சுக் கலந்த மதுவை அருந்தியதாக நம்பப்படும் 6 சுற்றுப்பயணிகள் லாவோஸ் நாட்டில் மரணம் அடைந்தனர். 

அதையடுத்து Tiger நிறுவனத்தின் Vodka, Whisky பானங்களை விற்கவும் அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பயணத்துறை ஊடகமான Smartraveller சொன்னது.

பானங்கள் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இம்மாதம் 12ஆம் தேதி வாங் வியோங் (Vang Vieng) நகரில் சுற்றுப்பயணிகள் நச்சுப் பானத்தை அருந்தியதாக நம்பப்படுகிறது.

டென்மார்க், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

அதன் தொடர்பில் விடுதி மேலாளரும் ஊழியர்கள் 7 பேரும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset