நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவில் இரவு நேரங்களில் வானில் தோன்றும் 'ஒளி தூண்கள்'

ஒட்டாவா:

கனடாவின் அல்பெர்ட்டா நகரில் இரவு நேரங்களில் வானத்தில் 'ஒளி தூண்கள்' என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது.

காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த வெளிச்ச தூண்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

இதை பார்த்த பலரும், இது வேற்றுகிரக வாசிகளின் செயல் எனக் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் கனடாவில் இது போன்ற 'ஒளி தூண்கள்' பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

இது இயற்கையாக உருவாகும் ஒரு ஒளியியல் மாயை(Optical Illusion) என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

வளிமண்டலத்தில் 0.02 மில்லி மீட்டர் அளவு கொண்ட அறுகோண வடிவிலான பனி படிகங்கள் மீது ஒளி பட்டு சிதறும்போது இது போன்ற 'ஒளி தூண்கள்' தோன்றுவதாக கூறப்படுகிறது. 

பெரும்பாலும் தெரு விளக்குகள், டிராபிக் விளக்குகள் போன்றவற்றில் இருந்து வரும் வெளிச்சம் வளிமண்டலத்தில் பரவும்போது இந்த 'ஒளி தூண்கள்' தோன்றுகின்றன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset