நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்குச் சீனா எச்சரிக்கை

வாஷிங்டன்:

அமெரிக்காவுடன் பொருளியல் ரீதியாகப் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீனா எச்சரித்துள்ளது.

சீனாவைப் பாதிக்கும் அளவில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகள்மீது பெய்ஜிங் பதில் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் அந்நாட்டு வர்த்தக அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீடித்து வரும் வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உலக நாடுகள் அமெரிக்கா பக்கம் செல்லவோ சீனா பக்கம் செல்லவோ தயாராக இல்லை. 

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இரண்டு நாடுகளும் பலவிதமான உதவிகளை வழங்கியுள்ளன. 

அதனால் நடுநிலையாகச் செயல்பட்டுத் தீர்வு காண வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset