
செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவின் ராட்சத அலைகளில் சிக்கி 6 பேர் மாண்டனர்
மெல்பர்ன்:
ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ராட்சத அலைகளில் சிக்கிய 6 பேர் மாண்டனர்.
சில அலைகள் 3.5 மீட்டர் வரை உயர்ந்ததாகத் தெரிகிறது.
வாரயிறுதியில் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) , விக்டோரியா (Victoria) ஆகிய மாநிலங்களில் ராட்சத அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரித்தனர்.
ஏப்ரல் 20 சிட்னி நகருக்கு அருகே மீன் பிடிக்கச் சென்ற இருவர் அலையில் சிக்கினர்.
அவர்களில் ஒருவர் மட்டுமே பிழைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஏப்ரல் 18-ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மூவர் மூழ்கி மாண்டனர்.
மெல்பர்னில் கடலுக்குள் இழுக்கப்பட்ட இருவர் மாண்டனர்.
இந்நிலையில் அலைகளில் சிக்கிய மேலும் இருவரைத் தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருவரையும் வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
July 26, 2025, 2:57 pm
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
July 26, 2025, 10:11 am
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்
July 26, 2025, 9:52 am
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
July 25, 2025, 4:31 pm
பாலஸ்தீனம் தனி நாடு: பிரான்ஸ் அங்கீகாரம்
July 25, 2025, 11:50 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான எல்லையில் மோதல்: 14 பேர் மரணம்
July 25, 2025, 10:24 am