நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிறை இல்லாத தேசிய கொடி தொடர்பான காணொலி திரையிடப்பட்ட விவகாரம்: காவல்துறை இதுவரை ஐந்து போலிஸ் புகார்களைப் பெற்றுள்ளன 

பெட்டாலிங் ஜெயா: 

முழுமைத்துவம் பெறாத ஜாலுர் கெமிலாங் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு ஐந்து புகார்கள் கிடைக்கப்பெற்றதாக தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். 

கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் ஜாலூர் கெமிலாங் கொடி முழுமை இல்லாமல் கொண்ட காணொலி திரையிடப்பட்டது 

இந்த சம்பவம் தொடர்பாக பிகேஆர், அம்னோ கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் போலீசில் புகார் அளித்தனர். 

1950 சின்னங்கள், பெயர்கள் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கேட்டுக்கொண்டார். 

காவல்துறையினரின் விசாரணைக்கு இந்த விவகாரம் விட்டுவிடுவதாகவும் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று லெம்பா பந்தாய் எம்.பியுமான அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset